கோயம்புத்தூர் மாவட்டத்தில் தடாகம் சாலை தண்ணீர் பந்தல் பகுதியில் கனிமவளத் தடுப்பு அலுவலர் (வருவாய் ஆய்வாளர் ரமேஷ்) தலைமையில் குழு அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஈச்சர் வாகனம் (TN38CS3498) செம்மண் ஏற்றிக்கொண்டுவந்தது.
இந்நிலையில், சந்தேகத்திற்குரிய வந்த வாகனத்தை நிறுத்தி காவல் துறையினர் சோதனை நடத்தினர். பின்னர், ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், ஓட்டுநர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டபோது உரிய ஆவணங்கள் இல்லாமலும் அளவிற்கு அதிகமான செம்மண் ஏற்றிவந்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த வாகனத்தைப் பறிமுதல்செய்த அலுவலர்கள் தடாகம் காவல் நிலையத்திற்கு எடுத்துவந்து சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்த விசாரணையில், ஏற்கனவே தடாகம் பகுதியில் அளவிற்கு அதிகமாக கனிமவளங்களைத் திருடிவருவதாகத் தெரியவந்தது. இது குறித்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
அலுவலர்கள் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட லாரியைப் பறிமுதல்செய்தது சமூக செயற்பாட்டாளர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஜோதிடத்தின் நம்பிக்கையால் 5 வயது மகனை கொன்ற தந்தை!