பொள்ளாச்சியில் 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த அமானுல்லா(25), பகவதி(26) உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், பல மாதங்களாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் அனைவரும் பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-1யில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்புடைய பிரபு என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். கோவை மாவட்ட எஸ்.பி. சுஜீத்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் பிரபுவை தேடி வந்தனர். அதனையடுத்து தலைமறைவான பிரபுவை, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்து இன்று கைது செய்தனர். பின்னர் கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.