கோயம்புத்தூர் மணிகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (42). இவர் தனியார் சோலார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். விஜயன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நண்பர்களுடன் விளையாடச் சென்றார்.
அப்போது, சிறுமியை விஜயன் வீட்டிற்குள் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். பின்னர், இது குறித்து ராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில், விஜயனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.