கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து அருகே உள்ள கேரள மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்துவது அதிகரித்துவருகிறது.
இந்தக் கடத்தல் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இந்தத் தகவலை அடுத்து பொள்ளாச்சி சக்தி நகர், மீன்கரை சாலை பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 19 மூட்டை ரேசன் அரிசி கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் காரைப் பின் தொடர்ந்து வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் நான்கு மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அபுதாஹீர், சவுகத் அலி, முபாரக் என்றும் மூவரும் ஆனைமலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர் கடத்தலுக்குப் பயன்படுத்திய டாடா சுமோ - இரு சக்கர வாகனங்கள், 1, 200 கிலோ ரேசன் அரியை பறிமுதல்செய்து கோயம்புத்தூர் மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளரிடம் மேல் நடவடிக்கை எடுக்க ஒப்படைத்தனர்.
கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி வழியே கேரளாவிற்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.