கோவை மாவட்டம் முழுவதும் கனமழை தொடர்வதால் இரண்டாவது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை தொடர்வதால் பவானி ஆறு மற்றும் நொய்யல் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் கரையோரப் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது.
நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆங்காங்கே தரை பாலங்கள் உடைந்து நீரில் மூழ்கியுள்ளன. கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் கோவை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டும் பாதிப்புகளை சரி செய்ய அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.