கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகேவுள்ள கிணத்துக்கடவு முத்தூர் பகுதியைச் சேர்ந்த தென்னரசு என்பவரின் மகன் தண்டபாணி. இவரது மகள் அனுப்பிரியா (13) அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவந்தார்.
இவர்களது தோட்டத்தில் உள்ள மாடுகளை கவனித்துக்கொள்ளுமாறு அனுப்பிரியாவிடம் கூறியிருந்தனர். ஆனால், அனுப்பிரியா மாடுகளை கவனிக்காமல் பக்கத்திலுள்ள வாழைத் தோட்டத்தில் அமர்ந்து செல்போன் பார்த்துக்கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட அனுப்பிரியாவின் தாய் அவரைத் திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த அனுப்பிரியா வேளாண் நிலத்திற்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து, அவரை மீட்ட அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
![தற்கொலை செய்யும் எண்ணமிருந்தால் ஒரு ஐந்து நிமிடம் இவர்களுடன் செலவிடுங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10453879_suicide.jpg)
ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அனுப்பிரியா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அனுப்பிரியாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆபாசமாகத் திட்டிய பக்கத்து வீட்டுக்காரர்: கல்லூரி மாணவி தற்கொலை!