ETV Bharat / state

ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் தாக்கிய நபருக்கு வலைவீச்சு

கோவை: செல்வபுரத்தில் அமைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் தாக்கிய நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ஏடிஎம்
ஏடிஎம்
author img

By

Published : Jun 24, 2021, 1:42 PM IST

கோவை மாவட்டம் செல்வபுரம் ராமமூர்த்தி சாலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் அமைந்துள்ளது. இந்த மையத்துக்குள் இன்று (ஜூன் 24) அதிகாலை 2 மணி அளவில், 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றார்.

உடனே அதிலிருக்கும் சென்சார், இத்தகவலை ஹைதராபாத்தில் உள்ள வங்கி அலுவலகத்துக்கு அனுப்பியது. உடனே வங்கி அலுவலர்கள் இச்சம்பவம் குறித்து செல்வபுரம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர். இருப்பினும் அதற்குள் அந்நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து ஏடிஎம் இயந்திரத்தைக் காவலர்கள் ஆய்வுசெய்தபோது, அதன் கீழ்ப்பகுதியை அடையாளம் தெரியாத நபர் கல்லால் தாக்கி உடைக்க முயன்றதும், அது திறக்காததால் ஆத்திரத்தில் மானிட்டரை தாக்கி உடைத்துவிட்டுத் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து, தப்பியோடிய நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: இளைஞர்களை கொலை செய்ய முயன்ற கும்பல்: போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.