கோயம்புத்தூர்: பட்டப்படிப்பு படித்துவரும் இளம்பெண் ஒருவரிடம் சசிகலா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், அந்தப் பெண் அதிமுக உறுப்பினர் என்று கூறியதாக சொல்லப்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக சசிகலாவிடம் பேச ஆசைப்பட்டதாக அந்தப் பெண், கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இளம்பெண்களை கவர்ந்த ஆளுமை
சசிகலா முதலமைச்சராக ஆக வேண்டும் என அப்பெண் கேட்டுக் கொண்டநிலையில், அவருக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக சசிகலா பதிலளித்துள்ளார்.
சசிகலா தன்னுடைய முன்மாதிரி என குறிப்பிட்டு பேசிய அந்த பெண், தன் கல்லூரியில் பல பெண்களுக்கும் சசிகலாவின் ஆளுமை பிடிக்கும் என கூறியுள்ளார்.
பல இன்னல்களுக்கு நடுவில், ஒரு அரசை அமைத்துவிட்டு சென்றதாக சசிகலா அந்த ஆடியோவில் கடந்த காலத்தை நினைவுகூறுகிறார்.
சாதி கட்சியா அதிமுக?
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் அதிமுக சாதிக்கு அப்பாற்பட்ட கட்சியாக இருந்ததாகக் குறிப்பிட அந்த பெண், தற்போது அது மாறிவிட்டதாக வேதனை தெரிவித்தார்.
அதை மாற்ற வேண்டும் என சசிகலா தெரிவிப்பதுடன், கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு அனைவரையும் சந்திப்பதாக வாக்களித்துள்ளார்.
சசிகலா தொலைபேசி வாயிலாக, இளம்பெண்ணுக்கு ஆறுதல் கூறி தேற்றும் உரையாடல் தற்போது வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.
திடீர் உரையால் ஏன்?
கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரக்தியில் இருக்கும் மக்களிடம் பேச முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:டெல்டா பகுதிகளை ஏலத்தில் இருந்து விலக்குக - தமிழ்நாடு அறிவியல் இயக்கம்