கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் இன்று (நவ.5) சிங்காநல்லூர், பீளமேடு, சூலூர், காந்திபுரம், காந்தி பார்க் ஆகிய பகுதிகளில் மாலை 5 மணியிலிருந்து, 7 மணி வரை கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் சூலூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் தொண்டு நிறுவனமான சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின்(கிளை நிறுவனம்) சுற்றுப்புற சுவரின் ஒருபகுதி மழை காரணமாக இடிந்து விழுந்தது.
இருப்பினும் மழையால் அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாததால், பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சாந்திக்கு கியர்ஸில் பணிபுரியும் தொழிலாளர்கள் இடிந்த பாகங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கோவையில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக நீர்நிலைகளில், நீரின் வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.