ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர் - அதிகாரிகள் விளக்கம் என்ன? - பொள்ளாச்சி கோட்டூர் அரசு மருத்துவமனை

Lack of Workers in Govt Hospital: பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lack of Workers in Govt Hospital
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 4:14 PM IST

Updated : Sep 6, 2023, 5:26 PM IST

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளரின் வைரல் வீடியோ

கோயம்புத்தூர்: வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருந்துவமனைக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் வருகை தருகின்றனர். ஒரு நாளுக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால், அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகிறது. வால்பாறையில் இருந்து வரும் நோயாளிகளுக்கு அவசர கால சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் கொண்டு செல்லப்படுகின்றனர்.

தலைமை மருத்துவர் ஒருவர், 2 கூடுதல் மருத்துவர்கள், 6 செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என பலர் இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், கோட்டூர் அரசு மருத்துவமனையில் பெண் தூய்மை பணியாளர்,மருத்துவமனைக்கு வந்த நோயாளிக்கு காலில் அடிபட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கோட்டூர் அரசு மருத்துவமனை தரப்பில் விளக்கம் கேட்க முயன்ற போது, தலைமை மருத்துவர் முருகபூபதி கூறியதாவது, "இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதோடு கோட்டூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க: "அருந்ததியினப் பெண் சமைத்தால் சாப்பிட மாட்டோம்".. வம்பு செய்த நபருக்கு ஆப்பு வைத்த ஆட்சியர்.. கரூரில் நடந்தது என்ன?

Last Updated : Sep 6, 2023, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.