கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பொது இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது. மேலும், ஒரு சில முக்கியமான இடங்களில் தானியங்கி கிருமி நாசினி சுரங்கமும் அமைக்கப்படுகின்றன.

அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கிருமி நாசினி சுரங்கம் இன்று அமைக்கப்பட்டது. இது கோவையில் இயங்கிவரும் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் வைக்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தொடங்கிவைத்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியூர் செல்வதற்கான அனுமதி வாங்குவதற்கு பல்வேறு மக்கள் வருகின்றனர். ஏற்கனவே அவர்களுக்கு கிருமி நாசினி மருந்துகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தானாக இயங்கும் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கிருமி நாசினி சுரங்கம் வழியாக செல்லும்பொழுது கிருமிநாசினி உடல் முழுவதும் தெளிக்கப்படுவதால் நோய் தொற்று பரவாமல் இருக்க மிகவும் உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: இளைஞர்கள் வீட்டில் இருக்கவும் - அமைச்சர் கே.பி. அன்பழகன்