ETV Bharat / state

கார் மோதியதில் கடமான் உயிரிழப்பு: வாகன ஓட்டிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் - Sambar deer killed in accident at Aliyar

கோயம்புத்தூர்: கார் மோதிய விபத்தில் கடமான் உயிரிழந்ததையடுத்து, அவ்வாகனத்தை ஓட்டிய நபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

deer
உயிரிழந்த மான்
author img

By

Published : Nov 7, 2020, 9:11 AM IST

Updated : Nov 7, 2020, 9:47 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியார் சாலை அருகே மணிகண்டன் என்பவர் தனது சொகுசு காரை அதிவேகமாக ஓட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த கடமானைக் கவனிக்காமல், மணிகண்டன் அந்த மான் மீது வாகனத்தை ஏற்றினார்.

வாகனம் மோதிய விபத்தில் கடமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி, உயிரிழந்த கடமானின் உடலை உடற்கூராய்விற்காக, பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார்.

deer
உயிரிழந்த மான்

வனப்பகுதியில் அதிகவேகமாக வாகனத்தை ஓட்டி வந்த மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணிகண்டன் பொள்ளாச்சி அருகே வால்பாறை ரொட்டிகடையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆரல்வாய்மொழியில் நாட்டு வெடிகுண்டி வெடித்து உயிரிழந்த கடமான்

Last Updated : Nov 7, 2020, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.