கோவை: தொண்டாமுத்தூர் தொகுதி தொடர்பாக வேலுமணியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாராகவுள்ளதாகவும், தோல்வி பயத்தால், எஸ்.பி. வேலுமணி புரளிகளைப் பரப்பிக்கொண்டிருப்பதாகவும் தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.
வடகோவை பகுதியில் திமுக அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியைவிட எஸ்.பி. வேலுமணி அதிகமாகக் கொள்ளை அடித்துள்ளதாகவும், பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் பாலமாக அவர் விளங்குவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
திண்டுக்கல் லியோனி தொண்டாமுத்தூர் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது பெண்கள் குறித்துப் பேசிய கருத்துக்கு தான் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிவரும் அவர், தொண்டாமுத்தூர் தொகுதிக்கென தனியாகத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதில், மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய நடவடிக்கை எடுப்பது, மலை அடிவாரத்தில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் அதிகமாக நடைபெறும் மனித மிருக மோதலைத் தடுக்க மூன்று பேர் கொண்ட வல்லுநர் குழு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: கண்டனத்திற்கு உள்ளான பாஜகவின் இருசக்கர வாகன பேரணி