கோவை : ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கத்தி வருவதாக கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, இன்று (நவ.22) கோவை வந்த விமானப் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில், கடலூரை சேர்ந்த சங்கர்(29), சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார்(37), பரமக்குடியைச் சேர்ந்த ராம் பிரபு(35), சேலத்தைச் சேர்ந்த குமரவேல்(44), ஆகியோர் உடல்கள், மலக்குடல்கள், உடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட ரூ.6.5 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, 4 பேரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மின்சாரம் இல்லாத 12 கிராமங்களில் மின் கட்டண ரசீது வழங்கப்படும் அவலம்!