ETV Bharat / state

ரூ. 49.50 லட்சம் மோசடி - அரசுப்பள்ளி தலைமையாசிரியர்​ கைது - குற்றப்பிரிவு காவல்துறையினர்

கோவையில் பல்வேறு நபர்களிடமிருந்து ரூ 49.50 லட்சம் பணம் பெற்று ஏமாற்றி வந்த அரசுப்பள்ளி தலைமையாசிரியரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ரூ. 49.50 லட்சம் மோசடி
ரூ. 49.50 லட்சம் மோசடி
author img

By

Published : Jul 9, 2021, 9:42 AM IST

கோயம்புத்தூர்: கணபதியை சேர்ந்த மாலதி (52) என்பவர் அன்னூர் பொன்னேன்கவுண்டன் புதூர் ஆரம்பப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு கார்த்திக்குமார் என்பவரிடம், தனது மகள் திருமணம், மகனின் உயர்கல்விக்காக 20 லட்சம் ரூபாய் கடனாக அவர் பெற்றுள்ளார்.

மேலும் 5 பேரிடம் மோசடி

பணத்தை திருப்பிக் கேட்டபோது, காசோலையாக கார்த்திக்குமாரிடம் தந்துள்ளார். ஆனால் அவை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பின. அதிர்ச்சியடைந்த அவர் மாலதியிடம் கேட்டதற்கு முறையான பதில் இல்லை.

இதேபோல் உறவினர்கள் ஐந்து பேரிடம் ரூபாய் 29 லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்காமல் அவர் ஏமாற்றி வந்தது தெரிய வந்தது.

ஆசிரியர் தலைமறைவு

இதையடுத்து தலைமை ஆசிரியர் மாலதி மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவில் கார்த்திக்குமார் புகார் அளித்தார். தலைமறைவாக இருந்த மாலதியை, காவல்துறையினர் அத்திப்பாளையத்தில் நேற்று(ஜூலை 8) ஆம் தேதி கைது செய்தனர்.

அவரிடமிருந்து, ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தாயிடம் ரூ.50 லட்சம் பணம் பறிக்க முயன்ற மகன்: கடத்தல் நாடகமாடியது அம்பலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.