ETV Bharat / state

2000 ரூபாய் நோட்டு மாற்றுவதாக கூறி ரூ.1 கோடி அபேஸ்.. பலே கும்பல் சிக்கியது எப்படி? - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்

2000 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாயாக மாற்றித் தருவதாக கூறி கோவையைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் 1 கோடி ரூபாய்க்கு மேல் நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கோடி 500 ரூபாய் நோட்டுகள் அபேஷ்!:12 மணி நேரத்தில் சிக்கிய குற்றவாளிகள்

author img

By

Published : Jun 12, 2023, 5:14 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தில் பிரகாஷ் (44) என்பவர் நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கோவையில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் மூலமாக பொள்ளாச்சியைச் சேர்ந்த சின்னகுட்டி என்பவர் அறிமுகமாகியுள்ளார். சின்னகுட்டி தனக்கு தெரிந்த ஒரு நபரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளதாகவும், அதனை 15 சதவீதம் கமிஷன் வைத்து 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று பிரகாஷிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனா(38), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன்(52), அழகர்சாமி(45), சௌமியன்(29), கருவேலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கவாஸ்கர்(26) மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி(43) என்கின்ற சின்னகுட்டி ஆகிய ஆறு பேரும் காரமடையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பிரகாஷை சந்தித்து கமிஷன் தொடர்பாக பேசி உள்ளனர்.

மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி அதற்கு இணையான 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு வருமாறு கூறியுள்ளனர். இதனை நம்பி அம்பராம்பாளையம் அருகே ஒரு கோடியே 27 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் பிரகாஷ். அப்போது மூன்று கார்களில் வந்த மோசடி கும்பல் பிரகாஷிடம் 500 ரூபாய் கட்டுகளை பார்க்க வேண்டும் என கூறியுள்ளது.

அதனை நம்பிய பிரகாஷ் அவர்களிடம் கொண்டு வந்த பனத்தை காட்டியுள்ளார். இதனை அடுத்து பிரகாஷிடம் இருந்து ரூபாய் ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 20,000 மதிப்புள்ள பணம் என்னும் இயந்திரத்தையும் எடுத்துக்கொண்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இதையும் படிங்க:12 ஆண்டுகளுக்குப் பின் சென்னை ஐஐடியில் நேரடிக் கலந்தாலோசனை

இது தொடர்பாக, ஆனைமலை காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இதில் தேனி, திண்டுக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சின்னகுட்டி(42), மீனாட்சி(38), பாண்டியன் (52), அழகர்சாமி (45), சௌமியான்(29), கவாஸ்கர்(26) ஆகிய 6 பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் இருந்து ரூபாய் 1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் 3 நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதை அடுத்து பல்வேறு இடங்களில் இதுபோன்ற பண மோசடி சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ART Jewelry Scam: 28 நாட்களில் பணம் திரும்ப கிடைக்கும்ல; ஏஆர்டி உரிமையாளர் வெளியிட்ட வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.