தமிழ்நாட்டில் கரோனா தொற்று ஆறு மாதங்களுக்கு மேல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்தது.
பிரதான சுற்றுலாத் தலமான வால்பாறைக்கு இரு சக்கரம் வாகனம், கார் மூலம் சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்திற்கும் மேல் சுற்றுலா பயணிகள் வருகையால் கரோனா பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
வாழைத்தோட்டம் பகுதியில் முதியவர் ஒருவர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார், கலைஞர் நகர், கூட்டுறவு காலணி பகுதியில் இரண்டு பெண்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில், அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வால்பாறை நகராட்சி கமிஷனர் உத்திரவின் பேரில் அட்டகட்டி சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை திரும்பி அனுப்பி வைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வருகையால் கரோனா தொற்று பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகையால் வால்பாறையில் கரோனா தொற்று பரவும் அபாயம் - வால்பாறை சுற்றுலாத்தலங்கள்
கோயம்புத்தூர்: சுற்றுலாப் பயணிகள் வருகையால் வால்பாறையில் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.