ETV Bharat / state

பொள்ளாச்சியை தென்னை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - ஜெயராமன் கோரிக்கை - Coimbatore Coconut Manufacturer and Vinayaka Coconut Manufacturer

கோயம்புத்தூர்: உலக தென்னை தின விழாவில் கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜெயராமன், பொள்ளாச்சியை தென்னை மாவட்டமாக  அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் உலக தென்னை தின விழா
author img

By

Published : Sep 7, 2019, 7:08 PM IST

பொள்ளாச்சியில் கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தினரும், விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தினரும் இணைந்து உலக தென்னை தின விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர். பி.ஏ. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜெயராமன், முன்னாள் கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், வேளாண்மை உற்பத்தியாளர் ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண் விற்பனை வணிகத் துறை ஆணையாளர் சுன் சோங்கம் ஐடக் சிரு, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சட்டமன்ற துணை சபாநாயகர் ஜெயராமன் பேட்டி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயராமன், பொள்ளாச்சியில் ஒரு கொள்முதல் நிலையம் அமைத்து அதில் நீரா பானத்தை பதப்படுத்தி உலகம் முழுவதும் அதனை ஏற்றுமதி செய்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் என்றும் இம்மாத இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் கேரள முதலமைச்சரை சந்தித்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை நான்கு லட்சம் ஏக்கர் தென்னை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்தப்படும் என்றும் தென்னை சார்ந்த தொழில்கள் பொள்ளாச்சியில் நடைபெற்று வருவதால் அதை சுற்றியுள்ள கிணத்துக்கடவு, ஆனைமலை, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை இணைத்து தென்னை மாவட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சுற்றியுள்ள தென்னை உற்பத்தியாளர்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள், விவசாயிகள், என பலர் கலந்து வேளாண் இடுபொருட்கள், விவசாய கருவிகள், விதைகள் ஆகியவற்றை பெற்று கொண்டு நீரா பானம் கொண்டு வந்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

Intro:cocanetdayBody:cocanetdayConclusion:பொள்ளாச்சியில் உலக தென்னை தினம் சட்டமன்ற துணை சபாநாயகர் ஜெயராமன் பங்கேற்பு
பொள்ளாச்சி செப் 7: பொள்ளாச்சியில் உலக தென்னை தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்த உலக தென்னை தின விழா தனியார் கல்லூரியில் கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு சட்டமன்ற துணை சபாநாயகர் ஜெயராமன் கலந்து கொண்டார் முன்னாள் கயிறு வாரிய தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர் ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி வேளாண் விற்பனை வணிகத் துறை ஆணையாளர் சுன் சோங்கம் ஐடக் சிரு ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் வேளாண் இடுபொருட்கள விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற துணை சபாநாயகர் நீரா பானத்தை கொண்டு வந்த முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நன்றிகளை விவசாயிகள் தெரிவித்துக்கொண்டர் என்றும்
நீரா பானம் வெளிநாடுகளுக்கு இறக்குமதி செய்ய பொள்ளாச்சியில் ஒரு தலைமை இடமாகக் கொண்டு ஒரு கொள்முதல் நிலையம் அமைத்து அதில் நீரா பானத்தை பதப்படுத்தி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் மற்றும் இம்மாத இறுதியில் தமிழக முதல்வர் கேரள முதல்வரை சந்தித்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய பேச்சுவார்த்தை நடத்துவார் என நம்பிக்கை தெரிவித்தார் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நான்கு லட்சம் ஏக்கர் தென்னை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தார் தென்னை சார்ந்த தொழில்கள் பொள்ளாச்சியில் நடைபெற்று வருவதால் அதை சுற்றியுள்ள கிணத்துக்கடவு ஆனைமலை உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் வால்பாறை இவைகளை இணைத்து வேளாண்மை மாவட்டமாக முதல்வர் முறையாக அறிவிக்க உள்ளார் என கூறினார் இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சுற்றியுள்ள தென்னை உற்பத்தியாளர்கள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர். பேட்டி- பொள்ளாச்சி ஜெயராமன்(சட்டபேரவை துணை சபாநாயகர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.