கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு இட வசதி செய்து தர வேண்டி பாரா வாலிபால் அசோசியேஷன் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில், “கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கோவையில் தனியார் கல்லூரி விளையாட்டு அரங்கம் அல்லது வேறு ஏதேனும் காலியிடங்களின் பயிற்சி எடுத்து வந்தோம். தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற முடியாத நிலை இருக்கிறது. எனவே கோவையில் மேற்கொண்டுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கும், பயிற்சி எடுப்பதற்கும் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க இட வசதி செய்து தந்து உதவ வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருச்சியில் விவசாயிகள் பேப்பர் ராக்கெட் விடும் நூதன போராட்டம்!