ETV Bharat / state

'ரேசன் கடைகளில் பொருள்கள் வாங்காத அட்டையாளர்களை நீக்க நடவடிக்கை' - ராதாகிருஷ்ணன் - ரேசன் கடைகளில் ராதாகிருஷ்ணன் ஆய்வு

நியாய விலைக்கடைகளில் பொருள்கள் வாங்காத அட்டையாளர்களை கண்டறிந்து அவர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன்
செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Jun 25, 2022, 6:57 PM IST

கோயம்புத்தூர்: மாவட்டத்தில் உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக பீளமேடு பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டார். நியாயவிலை கடையில் உள்ள பொருள்களின் தரத்தை ஆய்வு செய்து அங்குள்ள பயோமெட்ரிக் கருவியை பரிசோதனை செய்தார்.

மேலும், பொதுமக்களிடம் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார். அவரிடம் பொதுமக்கள் சில குறைகளை தெரிவித்தனர். முக்கியமாக பயோமெட்ரிக் கருவி அடிக்கடி வேலை செய்வதில்லை என்றும் இதனால் வயதானவர்கள் உள்பட பலருக்கும் பொருள்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர். அவர்களிடம் இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உறுதியளித்தார்.

நியாய விலைக்கடைகளில் ராதாகிருஷ்ணன் ஆய்வு

மேலும் முதியவர்களுக்கு பயோமெட்ரிக் கருவி சில நேரங்களில் வேலை செய்யவில்லையென்றால் குறிபேடு எதிலாவது கையெழுத்து வாங்கிவிட்டு பொருள்களை தருமாறு ஊழியர்களிடம் கூறினார். பின்னர் பொதுமக்கள் அவருக்கு பொன்னாடை அணிவிக்க வந்தபோது பொன்னாடையை வாங்கி முதியவருக்கு அணிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 2.21 ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இரவு நேரத்தில் கேரள எல்லை சோதனைச் சாவடிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். தமிழ்நாட்டில் 34ஆயிரத்து 777 நியாயவிலைக் கடைகள் உள்ளன. கோவையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன்

இங்கு ஆய்வு மேற்கொண்டதில் பொதுமக்கள் பலரும் முதியவர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் சில பிரச்சினைகள் உள்ளதாகவும் சில கருவிகளில் பிரச்சினைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இங்குள்ள பணியாளர்களும் அதை தெரிவித்துள்ளனர். பல நேரங்களில் தரமற்ற பொருள்கள் விநியோகம் செய்யப் படுவதாகவும் இன்று தரமான பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே நியாயவிலைக் கடைகளில் விற்பனை ஆகாத பழைய அரிசி போன்றவற்றை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் குடோனுக்கு அனுப்புமாறு பணியாளர்களிடம் கூறியுள்ளோம். பல்வேறு இடங்களில் மாதிரி கடைகள் உருவாக்கும் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளோம். நியாயவிலைக் கடைகளில் வாங்காத அட்டையாளர்களை கண்டறிந்து அவர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள கடைகளை தரம் உயர்த்தி மார்டன் கடைகளாக மாற்றுவதற்கு முதலமைச்சர் ஒப்புதலுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். அமுதம் காமதேனு கடைகளை தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். தற்போது விவசாயத்தை பொருத்தவரை இந்த ஆண்டு செப்டம்பர் முதலிலேயே கொள்முதல் செய்வதற்கு பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அதேசமயம் நாங்களும் எங்களை தயார் படுத்திக் கொண்டுள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: 'தமிழர்கள் மொழிக்காக போராடுபவர்கள்' - அமெரிக்காவில் தலைமை நீதிபதி பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.