கோயம்புத்தூர் மாவட்டம் ரேஸ் கோர்ஸ் சாலையில் 3 கி.மீ. வரை அமைய உள்ள 'சீர்மிகு நகரம்' பணிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அடிக்கல் நாட்டினார்.
அந்தத் திட்டத்தின்கீழ் ரேஸ் கோர்ஸ் சாலையில் 3 கி.மீ. வரை ரூ. 40.70 கோடி மதிப்பில் பூங்காக்கள், திறந்தவெளி திரையரங்கங்கள், சிற்றுண்டி கடைகள், மைதானம், அதிநவீன கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், இலவச வைஃபை, வாகனங்கள் நிறுத்துமிடம், நிழற் குடைகள், கண்காணிப்புக் கேமரா உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.
அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ரேஸ் கோர்ஸ் சாலையில் பல வசதிகள் அமைக்கப்பட உள்ளன. கோயம்புத்தூர் மாவட்டம் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தற்பொழுது எட்டியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கரோனா வைரஸ் (தீநுண்மி) கட்டுப்பாட்டில் உள்ளது. கோயம்புத்தூரில் தீநுண்மி பாதிப்பு மிகுந்த பகுதிகளில் கூடுதலாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவை விரட்ட சீரக நீரை குடிக்கவும்: மருத்துவராக மாறிய மீன்வளத்துறை அமைச்சர்