கோயம்புத்தூர்: இந்தியாவில் முழுவதும் செயல்பட்டு வரும் யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, ஓரியண்டல், நேசனல் இன்சூரன்ஸ் ஆகிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் மண்டல அலுவலகத்திலும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு ஆகஸ்ட் 2 ஆம் தேதி பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் சட்ட மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து பேசிய கூட்டு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சேக்கிழார், "இப்போராட்டத்தில் இந்தியா முழுவதும் 50 ஆயிரத்தும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பிரதம மந்திரியின் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் பொது காப்பீடு பெரும் மக்கள் பாதிக்கப்படுவர். அரசின் திட்டங்கள் தொடர்ந்து செயல்பட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பொது துறையாக செயல்பட வேண்டும். மத்திய அரசு இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் " என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை