கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் வன்னிராஜன்(10), மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர், நேற்றிரவு 7 மணியளவில் திடீரென மாயமாகியுள்ளார். இதையடுத்து, காணாமல் போன சிறுவனைத் தேடி வந்த பெற்றோர், இரவு 8 மணியளவில் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் அர்ஜுன் தலைமையிலான காவல் துறையினர், சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 மணியளவில் சிறுவனை இருகூர் பகுதியில் கண்டுபிடித்த காவல் துறையினர், சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
புகார் அளித்து இரண்டு மணிநேரத்தில் சிறுவனை கண்டுபிடித்து கொடுத்த காவல் துறையினருக்கு அவனது பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மேலும், சிங்காநல்லூர் காவல் துறையினரின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் சிறுவன் கடத்தல்: 3 பேர் துப்பாக்கி முனையில் கைது!