இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளின்றி சாலையில் நடமாடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்திருந்தது. இருப்பினும் பலர் சாலைகளில் சுற்றித் திரிந்த வண்ணம் உள்ளனர்.
அவ்வாறு சுற்றித் திரிந்தவர்கள் மீது காவல் துறையினர் கடும் தாக்குதல் நடத்தினர். மேலும் நூதன தண்டனையும் வழங்கினர். ஆனாலும் சிலர் சாலைகளில் ஆங்காங்கே நடமாடி கொண்டுதான் இருந்தனர்.
இதையடுத்து, கோவை மாநகரில் ஆயிரத்து 500 காவலர்கள் மாவட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மொத்தமாக கோவையில் 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா: ஒரு மாத ஊதியத்தை நிதியாக வழங்கும் வைகோ!