கோவை மாவட்டம் பொள்ளாச்சிஆழியாறு குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வனத்துறையினர் நாங்கள் மலைப் பாம்பை பிடிக்க தங்களால் வர இயலாது. நீங்களே பிடித்துக்கொண்டு வந்து எங்களிடம் தாருங்கள் என்று அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.
பாம்பினை பிடிக்கும் போது மக்களுக்கோ, அல்லது பாம்பின் உயிருக்கோ ஆபத்து ஏற்படலாம் என தெரிந்தும் அலட்சிய போக்கில் செயல்பட்ட வனத்துறையினருக்கு தக்க பதிலளிக்க அங்குள்ள சிறுவர்கள் பாம்பை பிடித்து ஆழியார் வனத்துறையினருக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
அரசுப் பணியில் உள்ள வனத்துறையினர் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அறிந்தும் அலட்சியமாக பதிலளித்ததால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும், வனத்துறையினர் இனியாவது பொதுமக்கள் நலன் கருதி செயல்பட வேண்டும் எனவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.