ETV Bharat / state

காரை திருட முயன்ற இளைருக்கு உணவு, குடிநீர் வழங்கல்: கோவையில் ருசிகரம்! - கோயம்புத்தூர் அண்மைச் செய்திகள்

காரைத் திருட முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு, பொதுமக்களே உணவு, குடிநீர் வழங்கி எச்சரித்து அனுப்பிய ருசிகர சம்பவம் கோவையில் நடந்தேறியுள்ளது.

காரை திருட முயன்ற இளைருக்கு உணவு, குடிநீர் வழங்கல் - கோவையில் ருசிகரம்!

author img

By

Published : Oct 3, 2021, 5:26 PM IST

கோவை: ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரி முன்பு சுரேஷ்குமார் என்பவர், தனது காரை நிறுத்தி வைத்து விட்டு உணவகத்துக்குச் சென்றுள்ளார்.

அப்போது அவரது காரை வாலிபர் ஒருவர் கம்பியைக் கொண்டு திருட முயன்றுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் வாலிபரை மடக்கிப் பிடித்து அருகில் உள்ள கம்பத்தில் அவரைக் கட்டிவைத்துள்ளனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த போத்தனூர் காவல் துறையினர், இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவ்விசாரணையில் பிடிபட்ட இளைஞர் வட மாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து இளைஞரைப் பிடித்துவைத்த பொதுமக்களே அவருக்கு உணவு, குடிநீர் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மது குடித்த சிறுவன் மரணம்; அதிர்ச்சியில் தாத்தாவும் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.