ETV Bharat / state

மதுபான கடைகள் திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் - வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம்

கோவை: டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் புலிகள் கட்சியினர் அவரவர் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுபான கடைகள் திறப்புக்கு எதிர்த்து ஆர்ப்பாட்டம்

author img

By

Published : May 6, 2020, 6:46 PM IST

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, மற்ற பகுதிகளில் தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சில தொழில்துறைகள், கடைகள் போன்றவை இயங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

அதேசமயம் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை (மே 7) முதல் டாஸ்மாக் கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்குப் பல கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

மதுபான கடைகள் திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் தமிழ் புலிகள் கட்சியினர் தங்களது வீட்டின் முன்பு டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், போராட்டம் நடத்துவதாகக் கூறி இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்டம் முழுவதும் தமிழ் புலிகள் கட்சியினர், அவர்களது வீட்டின் முன்பு சமூக இடைவெளியைப் பின்பற்றி நின்று டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இது குறித்து கோவை மாவட்ட பொதுச் செயலாளர் இளவேனில் கூறியதாவது, 'தற்பொழுது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தொடர்ந்து மக்கள் யாரும் வேலைக்குச் செல்லாமல் வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளைத் திறப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஆரோக்கியம் அளிக்கும் இறைச்சிக் கடைகள் போன்றவற்றை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டிருப்பது எவ்வகையில் நல்லது?

தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய பல லட்சம் கோடி ரூபாய்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவதற்கு நமது அரசாங்கத்திற்கு தெம்பில்லை. இப்படி டாஸ்மாக் கடைகளைத் திறந்து மக்களிடம் பணம் வசூலிக்கும் எண்ணம் மிகவும் கண்டனத்திற்குரியது. டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 60 இடங்களில் தமிழ்புலிகள் கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவிக்கின்றோம்' என்று கூறினார்.

இதையும் படிங்க: முன்னாள் மத்திய இணை அமைச்சர் எழில்மலை உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.