ETV Bharat / state

அரசால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - வணிகர்கள் போராட்டம்! - பறிமுதல்

பொள்ளாச்சி : தமிழ்நாடு அரசால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கும் பொள்ளாச்சி நகராட்சியை கண்டித்து 300க்கும் மேற்பட்ட வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Protest burst out because of Confiscation of Plastic Products which is not banned by the Government
author img

By

Published : Jul 9, 2019, 6:00 PM IST

தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொள்ளாச்சியில், நகராட்சி அலுவலர்கள் கடைகளில் ஆய்வு நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்துவந்தனர்.

ஆனால் நகராட்சி அலுவலர்கள் அத்துமீறி கடைக்குள் நுழைந்து அரசால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்து லட்சக்கணக்கில் அபராதம் விதித்து வருவதாக வணிகர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நகராட்சி அலுவலர்களின் செயலைக் கண்டித்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் இருதய ராஜா தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சியில் வணிகர்கள் போராட்டம்!

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி சிறு வியாபாரிகள் சங்கம், பொள்ளாச்சி கிணத்துக்கடவு, வால்பாறை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்துகொண்டு முழக்கம் எழுப்பினர். மறுசுழற்சி செய்ய முடியாத அன்னிய பொருட்களின் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்யாமல், தடை செய்யப்படாத முறுக்கு, கடலை மிட்டாய் உள்ள மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கவர்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்வதாக வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது குற்றம்சாட்டினர்.

எனவே, வணிகர்களுக்கு எதிராக செயல்படும் பொள்ளாச்சி நகராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

Intro:mutrugaiBody:mutrugaiConclusion:பொள்ளாச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கும் பொள்ளாச்சி நகராட்சி கண்டித்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம் - 500க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்பு.

பொள்ளாச்சி - ஜூலை -9

தமிழகத்தில் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பயன்படுத்த தடை விதித்துள்ளது, இதனால் அந்த பகுதியில் அதிகாரிகள் கடைகளில் ஆய்வு நடத்தி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் அதை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர், இந்நிலையில் பொள்ளாச்சியில் நகராட்சி அதிகாரிகள் கடைகளில் ஆய்வு நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்தனர், ஆனால் நகராட்சி அதிகாரிகள் அத்துமீறி மீறி கடைக்குள் நுழைந்து மனிதர்களை மிரட்டும் நோக்கில் அரசால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து லட்சக்கணக்கில் அபராதம் விதித்து வணிகர்களை மிரட்டும் நோக்கில் செயல்படுவதாக புகார் தெரிவித்து வந்தனர், இந்நிலையில் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் இருதய ராஜா தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி சிறு வியாபாரிகள் சங்கம் மற்றும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளை கண்டித்து முழக்கம் எழுப்பினர், மறுசுழற்சி செய்ய முடியாத அன்னிய பொருட்களின் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்யாமல், தடை செய்யப்படாத முறுக்கு, கடலை மிட்டாய் உள்ள அதுவும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கவர்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்வதாக வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது குற்றம் சாட்டினர், வணிகர்களுக்கு எதிராக செயல்படும் பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வணிகர்கள் வலியுறுத்தினர்.

பேட்டி - இருதயராஜா, மாவட்டத் தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.