ETV Bharat / state

46 பேருக்கு தொற்று பரவல்... தனியார் கல்லூரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

author img

By

Published : Sep 16, 2021, 5:38 AM IST

கோவையில் 46 பேருக்கு தொற்று பரவும் வகையில் இயங்கிய தனியார் செவிலியர் கல்லூரிக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

ரூ.10 ஆயிரம் அபராதம்
ரூ.10 ஆயிரம் அபராதம்

கோயம்புத்தூர்: சரவணம்பட்டி பகுதியில் தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவ, மாணவியர், பணியாளர்கள் என 46 பேருக்கு நேற்று (செப்.15) கரோனா தொற்று கண்டறிப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் அக்கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே தொற்று பரவும் வகையில் இயங்கியதாக அக்கல்லூரிக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சமீரன் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள், மளிகை கடைகள் (Departmental Stores / Super Markets) தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள் (Malls), திரையரங்குகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.

உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 விழுக்காடு கடைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வார சந்தைகளுக்கும் ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதிக்கப்படுகிறது.

சந்தைகளில் வெளி மாவட்ட, மாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளமல் இருப்பதை சார் ஆட்சியர், நகராட்சி ஆணையர் உறுதிபடுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 82 விழுக்காடு பொதுமக்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வரும் 20ஆம் தேதி முதல் அனைத்து வணிக வளாகங்கள் (Malls), துணிக்கடைகள் (Textile Shops), நகைக் கடைகள் (Jewellery Shops) மற்றும் இதர கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தி இருக்க வேண்டும்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டியது அனைத்து பொதுமக்களின் கடமை" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நகைக்கடன் தள்ளுபடி: திருத்தப்பட்ட விவரங்களை கோரிய கூட்டுறவுத் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.