ETV Bharat / state

கைதிகள் வீடியோ காலில் பேசலாம் - கோவை மத்திய சிறைத்துறை நிர்வாகம் அறிவிப்பு..! - Jail Department

Coimbatore central jail prisoners: கோவை மத்தியச் சிறையில் உள்ள கைதிகள் உறவினர்களிடம் வீடியோ காலில் பேசிக்கொள்வதற்குக் கூடுதலாக ஏழு மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

prisoners-in-coimbatore-central-jail-are-allowed-to-make-video-call-with-kin
கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகள் இனி வீடியோ காலில் பேசலாம் - சிறைத்துறை நிர்வாகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 6:01 PM IST

கோயம்புத்தூர்: கோவை மத்தியச் சிறையில் கைதிகள் வீடியோ கால் பேசுவதற்குக் கூடுதலாக 7 மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை எஸ் பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிறைத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை மத்தியச் சிறையில் 2000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்துவது, தண்டனைக்குப் பின் சுய தொழில் செய்யவும் சிறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் கைதிகள் தங்களது உறவினர்களிடம் பேச மொபைல் போன் பயன்படுத்தச் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட கைதிகள் சிறை அலுவலர்கள் முன்னிலையில் மொபைல் போனில் பேசி வருகின்றனர்.

கைதிகள் மொபைல் போனில் தங்களது உறவினர்களிடம் பேச சிறையில் மாதம் தோறும் 90 நிமிடம் சிறைத்துறை அனுமதி வழங்கி உள்ளது. தற்போது மேலும் 30 நிமிடம் கூடுதலாகப் பேச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இனி மாதம் தோறும் ஒவ்வொரு கைதியும் 120 நிமிடம் மொபைல் போனில் பேசிக்கொள்ளலாம், பேசுவது மட்டும் இன்றி வீடியோ காலும் செய்து கொள்ளலாம், அதற்காகக் கோவை சிறைக்கு புதியதாக ஏழு மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் போன்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். நீண்ட காலம் சிறையில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ காலில் பேசும் போது, மன நிம்மதி அடைவர். சிறை நிர்வாகமே அனுமதி வழங்குவதால் சிறையில் முறைகேடு மொபைல் போன்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படும்.

சிறையில் முறைகேடு மொபைல் போன்கள் பயன்படுத்துவதைத் தடுக்க ஜாமர் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் கூடுதலாக ஜாமர் அமைக்கத் திட்டமிட்டுள்ளது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவல் நிலையத்திலேயே துணிகரம்.. தேனியில் இருவர் கைதானதன் பின்னணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.