கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் வாகனங்களை சோதனை செய்த பின்னரே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி சார்பில் நகர பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இறைச்சி கடைகளுக்கு வரும் கோழி, ஆடு ஆகியவை கொண்டு வரும் வாகனங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்றிரவு (ஜன.6) முழுவதும் கனமழை பெய்த நிலையில், பறவை காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:கால்நடைகளுக்கு பரவும் தோல் அம்மை: மருத்துவர்கள் கைவிரிப்பு!