ETV Bharat / state

வடகிழக்குப் பருவமழை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் - அமைச்சர் செந்தில் பாலாஜி - BJP s state president is a political clown

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மின்வாரியம் தயார்- செந்தில் பாலாஜி

author img

By

Published : Nov 1, 2022, 4:03 PM IST

கோவை: ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நகர சபைக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் பொது மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள 80 அடி சாலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நகர சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளருக்குப் பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 'கோவையில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அனைவரும் 24 மணி நேரமும் பணி செய்யத்தயாராக உள்ளனர். மின்வாரியமும் தயார் நிலையில் உள்ளது.
பாஜக மாநிலத்தலைவர் அரசியல் கோமாளியின் செய்திகளை என்னிடம் தவிர்க்க வேண்டும். உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஸ்டி அவர்தான்.

தொலைக்காட்சிகளில் கோமாளியின் செய்திகள் தான் முதலில் வருகின்றன. நாங்கள் கோமாளி என சொன்னது போல ஏதாவது கருத்து சொல்லி உள்ளோமா..? பத்திரிகையாளர்கள் மீது தமிழ்நாடு அரசு அக்கறை கொண்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மின்வாரியம் தயார்- செந்தில் பாலாஜி

இதையும் படிங்க:மத்திய பிரதேசத்தில் 4.3 ரிக்டர் அளவு நில அதிர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.