கோயம்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.19) திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்தும், கேலி செய்யும் வகையிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இது, திமுக கட்சியினர், ஆதரவு கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நேற்று (நவ.19) மதியமே திமுக ஆதரவாளர்கள், அனைத்து போஸ்டர்களையும் கிழித்து எரிந்தனர்.
இந்நிலையில், இன்று (நவ.20) கோவை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த திமுக ஆதரவாளரான சித்ரகலா என்பவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முற்பட்டார்.
இதனைக் கண்ட பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர், உடனடியாக அவரை தடுத்த காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அப்பெண்ணிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலினை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு