ETV Bharat / state

'குற்றவாளிகளின் தலைவனே..!'- கோவை எஸ்பியை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

author img

By

Published : Mar 29, 2019, 10:06 AM IST

கோவை: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தலைவன் போன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செயல்படுவதாக, துடியலூர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீஸ் எஸ்பியை எதிர்த்து நோட்டீஸ்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, சபரீசன் உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுகோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் புகார் அளித்த இளம்பெண் ஒருவரின் பெயர் முகவரியை வெளியிட்டதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது பல்வேறு அரசியல் கட்சியினர் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது. தேர்தல் ஆணையம் அவரை இடமாற்றம் செய்ய ஒத்துக்கொண்டது. இந்த விவகாரத்தில் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை துடியலூர் அடுத்த கஸ்தூரி நாயக்கன் பாளையம் புதூர் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு அதே பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரிடம் விசாரணை மட்டும் நடைபெற்று வருகிறது.

சிறுமி கொலை வழக்கு தொடர்பாக 8 ஆய்வாளர்கள், 6உதவி ஆய்வாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர், 2 கூடுதல் காவல்கண்காணிப்பாளர்கள்தலைமையில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத்தேடிவருகின்றனர். மேலும் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என துடியலூர் போலீசார் நோட்டீஸ் விநியோகம் செய்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க துடியலூர் பகுதியில் இன்று மாலை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனுக்கு எதிராக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் ஒருநோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில், குற்றவாளிகளின் புகலிடமாய் காவல் நிலையங்கள்..குற்றவாளிகளின் தலைவனாய் எஸ்பி பாண்டியராஜன்.. குற்றத்தை தடுத்து பாதுகாக்க வேண்டிய அரசு குற்றவாளிகளை உருவாக்கி பாதுகாக்கிறது..தோற்றுப் போய் திவாலாகி மக்களுக்கு எதிராய் போன அரசு கட்டமைப்பு, மக்களை பாதுகாக்காது.. வீதியில் இறங்கி கலகம் செய்வோம், அதிகாரத்தை கையில் எடுத்து நாமே தண்டிப்போம்.. போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் துடியலூர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிகழ்கிறது.

சு.சீனிவாசன்.       கோவை

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது..

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு ,சபரீசன் உட்பட நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளநர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் புகார் அளித்த இளம்பெண் ஒருவரின் பெயர் முகவரியை வெளியிட்டதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது பல்வேறு அரசியல் கட்சியினர் புகார் அளித்தனர் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது தேர்தல் ஆணையம் அவரை இடமாற்றம் செய்ய ஒத்துக்கொண்டது இந்த விவகாரத்தில் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை இந்நிலையில் திங்கள்கிழமை மாலை துடியலூர் அடுத்த கஸ்தூரி நாயக்கன் பாளையம் புதூர் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு அதே பகுதியில் கொலை செய்யப்பட்டார் இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரிடம் விசாரணை மட்டும் நடைபெற்று வருகிறது சிறுமி கொலை வழக்கு தொடர்பாக 8 ஆய்வாளர்கள் ஆறு உதவி ஆய்வாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர் 2 கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர் மேலும் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும் படியும் தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என துடியலூர் போலீசார் நோட்டீஸ் விநியோகம் செய்து வருகின்றனர் இது ஒருபுறம் இருக்க துடியலூர் பகுதியில் இன்று மாலை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனுக்கு எதிராக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது அதில்

குற்றவாளிகளின் புகலிடமாய் காவல் நிலையங்கள்

அவற்றில் தலைவனாய் எஸ்பி பாண்டியராஜன்

 குற்றத்தை தடுத்து பாதுகாக்க வேண்டிய அரசு குற்றவாளிகளை உருவாக்கி பாதுகாக்கிறது

தோற்றுப் போய் திவாலாகி மக்களுக்கு எதிராய் போன அரசு கட்டமைப்பு, மக்களை பாதுகாக்காது

 வீதியில் இறங்கி கலகம் செய்வோம் அதிகாரத்தை கையில் எடுத்து நாமே தண்டிப்போம்
என்ற வாசகங்கள் இடம் பெற்று உள்ளது இந்த போஸ்டர்கள் துடியலூர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிகழ்கிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.