ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் (Apple iPhone 16 Series) ஸ்மார்ட்போன்கள் விற்பனை நேற்று (செப்டம்பர் 20) தொடங்கியது. இதனை வீட்டு உபயோக அத்தியாவசிய பொருள்களை உடனடியாக டெலிவரி செய்யும் நிறுவனமான பிளிங்கிட் (Blinkit), தங்கள் தளத்தில் பட்டியலிட்டு, ஆர்டர் செய்பவர்களுக்கு 10 நிமிடங்களில் ஐபோன் 16 மொபைல்கள் டெலிவரி செய்யப்படும் என்று கூறியிருந்தது. இதனையடுத்து, இரண்டரை மணிநேரத்தில் சுமார் 300 ஐபோன் 16 மொபைல்களை நிறுவனம் விற்றுள்ளது.
இந்த விற்பனைக்கு முன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிளிங்கிட் நிறுவனர் அல்பிந்தர் திண்ட்சா, "மூன்றாவது வருடமாக யுனிகார்ன் ஏபிஆர் (UnicornAPR) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு (இந்த வருடம் முதல்) ஆகிய நகரங்களில் ஐபோன் 16 மாடல்களை 10 நிமிடங்களில் டெலிவரி கொடுக்க உள்ளோம். கடன் அட்டை, சுலப மாதத் தவணைத் திட்டங்களையும் யுனிகார்ன் ஏபிஆர் கொண்டுள்ளது," எனத் தெரிவித்திருந்தார்.
Get the all-new iPhone 16 delivered in 10 minutes!
— Albinder Dhindsa (@albinder) September 20, 2024
We’ve partnered with @UnicornAPR for the third year in a row, bringing the latest iPhone to Blinkit customers in Delhi NCR, Mumbai, Pune, Bengaluru (for now) — on launch day!
P.S - Unicorn is also providing discounts with… pic.twitter.com/2odeJPn11k
ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 18 (iOS 18) இயங்குதளத்துடன் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro), ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய மாடல்களை அறிமுகம் செய்தது. எனினும், அடிப்படை மாடலான ஐபோன் 16, அதன் மேம்பட்ட பதிப்பான ஐபோன் 16 பிளஸ் ஆகிய இரு மாடல்கள் மட்டுமே பிளிங்கிட்டில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது.
செப்டம்பர் 20, நேற்று நடந்த விற்பனை குறித்துப் பதிவிட்டிருக்கும் அல்பிந்தர், "நாங்கள் காலை 8 மணிமுதல் ஐபோன் 16 போன்களை டெலிவரி செய்யத் தொடங்கினோம். 300 போன்கள் விற்பனையைத் தொட இன்னும் சில நிமிடங்களே உள்ளன. இன்று ஒரு 'Crazy Day' ஆக இருக்கப் போகிறது," என்று பதிவிட்டிருந்தார்.
We started delivering iPhones at 8 AM - and we're going to cross the 300 mark in a couple of minutes 🤯
— Albinder Dhindsa (@albinder) September 20, 2024
Today is going to be one crazy day! pic.twitter.com/12oZfcY0Z8
இவர் இந்த பதிவை இடுகையில் செப்டம்பர் 20 நேரம் காலை 10:30 ஆகும். அதில், விற்பனையின் எண்ணிக்கை தொடர்பான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், '295' எனும் எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, வெறும் இரண்டரை மணிநேரத்தில் 295 ஐபோன் 16 மொபைல்களை பிளிங்கிட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இதையும் படிங்க:
ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- ஐபோன் 16 மொபைலில் 6.1 அங்குலமும், 16 பிளஸ் மாடலில் 6.7-அங்குல சூப்பர் ரெட்டினா திரை (Display) உள்ளது.
- அலுமினிய உலோகக் கட்டமைப்பு.
- ஏ18 சிப்செட்.
- ஆப்பிள் இன்டலிஜென்ஸ் ஆதரவு.
- பின்பக்கம் 48 மெகாபிக்சல் ஃபியூஷன் மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா.
- முன்பக்கம் டைனமிக் ஐலேண்டில் 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா.
- யுஎஸ்பி டைப்-சி ஆதரவு.
- செராமிக் பாதுகாப்பு.
- 25W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு.
- 128ஜிபி / 256ஜிபி / 512ஜிபி என மூன்று ஸ்டோரேஜ் வகைகள் உள்ளன.
- ஐபோன் 16 எடை 170 கிராம்; ஐபோன் 16 பிளஸ் எடை 199 கிராம்.
பிளிங்கிட் ஒரு சொமேட்டோ கீழ் இயங்கும் நிறுவனமாகும். பிளிங்கிட் போன்று அமேசான், பிளிப்கார்ட் ஆகிய பெரும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் ஐபோன் 16 மொபைல்களுக்கான உடனடி டெலிவரி முறையை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
தொழில்நுட்பம் சார்ந்த கூடுதல் செய்திகளுக்கு ஈடிவி பாரத் டெக் பக்கத்துடன் இணைந்திருங்கள்.
ஈடிவி பாரத் செயலியை இப்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். தயவுசெய்து செயலியைப் பதிவிறக்கி எங்களுடன் உங்கள் கருத்தைப் பகிரவும்.
உங்கள் வாட்ஸ்அப்பில் தினசரி செய்திகள் அறிந்து உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள் - ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.