கோயம்புத்தூர்: ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவர் தனது வீட்டில் வெளிநாட்டு வகை பூனை ஒன்றைக் கடந்த ஆறு ஆண்டுகளாக வளர்த்து வந்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி அன்று, இவரது வளர்ப்புப் பூனை காணாமல் போயுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தனது பூனையைக் காணவில்லை என சுவரொட்டி அச்சடித்து ஒட்டியுள்ளார். அதில், 'காணாமல் போன தனது பூனை குறித்த தகவலோ அல்லது அப்பூனையைக் கண்டுபிடித்து கொடுத்தாலோ, 5000 ரூபாய் சன்மானம் வழங்கபடும்' என அச்சிடப்பட்டு உள்ளது.
மேலும் அதில், பூனையின் உதட்டில் மச்சம் இருக்கும் என்னும் அடையாளத்தையும் பதிவிட்டுள்ளதைப் பார்த்து செல்லும் பொதுமக்கள் பூனைக்காக ஒரு சுவரொட்டியா என ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.