தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கால்நடை பிரிவின் சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், துணைவேந்தர், மாணவர்கள், கல்லூரி அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். முதலில் மாட்டை அழைத்து வந்து பூஜைகள் செய்து பட்டி மிதிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பொங்கலிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார், "அனைவருக்கும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேளாண் பல்கலைக்கழகத்தில் பொங்கல் பண்டிகையானது சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்நன்னாளில் 13 புதிய பயிர் வகைகளை விவசாயிகளுக்கு பரிசாக வழங்கவுள்ளோம். அதில் ஏழு ரகங்கள் வேளாண் ரகங்கள், ஆறு ரகங்கள் தோட்டக்கலை ரகங்கள், குறிப்பாக கோ 53 என்ற ரகம் வறட்சி நிறைந்த பகுதிகளிலும் வளரக் கூடியவையாகும்" என்று தெரிவித்தார்
மேலும், இந்த 13 ரகங்களும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நன்மைதரும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: சமத்துவப் பொங்கல் கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்!