ETV Bharat / state

'மீன்களால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வது தடுக்கப்படுகிறது!'

கோவை: குளங்களில் வியாபார நோக்கத்திற்காக வளர்க்கப்படும் மீன்களால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வது தடுக்கப்படுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

coimbatore
author img

By

Published : Aug 7, 2019, 3:55 PM IST

கோவை மாவட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. 20 முதல் 400 ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட குளங்களில் மீன்கள் வளர்க்கப்பட்டு ஆண்டுதோறும் ஏலம் விடுவது வழக்கம். அவ்வாறு மீன்பிடிக்க ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் உள்நாட்டு வகை மீன்களை தவிர தடைசெய்யப்பட்ட மீன்களும், வெளிநாட்டு வகை மீன்களும் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. அதனால், குளத்தின் அடியில் மீன் கழிவுகள் சேர்ந்து நிலத்தடியில் நீர் செல்லாத வகையில் தடுப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கவுசிகா நதி மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் கூறுகையில், "வியாபார நோக்கத்திற்காக வளர்க்கப்படும் மீன்களுக்கு கோழிக் கழிவுகள் போன்றவை உணவாக வழங்கப்படுகிறது. அதிகளவில் மீன்கள் வளர்க்கப்படுவதால் மீன் கழிவுகள் நீரின் அடியில் தேங்கி நீர் நிலத்திற்குள் செல்லாமல் அப்படியே ஆவியாகிறது.

மீன்களால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வது தடுக்கப்படுகிறது!

அதையடுத்து, உள்நாட்டு வகை மீன்களைத் தவிர வெளிநாட்டு வகை மீன்கள் வளர்ப்பதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. மீன் கழிவுகள் அகற்றப்பட்டால் மட்டுமே நிலத்தடி நீர் கீழே இறங்கும்.

குளங்களில் மீன் வளர்ப்பதற்கு தடைசெய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்ட வகை மீன்கள் மட்டுமே வளர்க்க அனுமதிக்க முறைப்படுத்த வேண்டும். மேலும் மீன்களுக்கு பல்வேறு வகையான உணவுகள் போடப்படுவதாலும் அந்தக் கழிவுகள் மண்ணில் படிந்து நீர் கீழே இறங்காது தடுக்கிறது" என குற்றம்சாட்டினார்.

அது மட்டுமல்லாது கழிவுநீர் குளத்தில் கலக்கப்படுவதாலும், பிரணாவாயு பற்றாக்குறையாலும், நெகிழிக் கழிவுகளாலும் குளத்தில் உள்ள மீன்கள் எல்லாம் இறந்து மிதக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்று சமூக செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Intro:குளங்களில் வியாபார நோக்கத்திற்காக வளர்க்கப்படும் மீன்களால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வது தடுக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்Body:கோவை மாவட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன 20 முதல் 400 ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட குளங்களில் மீன்கள் வளர்க்கப்பட்டு ஆண்டுதோறும் ஏலம் விடுவது வழக்கம் அவ்வாறு மீன்பிடிக்க ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் உள்நாட்டு வகை மீன்களை தவிர தடைசெய்யப்பட்ட மீன்களும் வெளிநாட்டு வகை மீன்களும் அதிகளவில் வளர்ப்பதால் குளத்தின் அடியில் மீன் கழிவுகள் சேர்ந்து நிலத்தடியில் நீர் செல்லாத வகையில் தடுப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் இதுகுறித்து கவுசிகா நதி மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் கூறுகையில் வியாபார நோக்கத்திற்காக வளர்க்கப்படும் மீன்களுக்கு கோழி கழிவுகள் போன்றவை உணவாக வழங்கப்படுகிறது அதிக அளவில் மீன்கள் வளர்க்கப்படுவதால் மீன் கழிவுகள் நீரின் அடியில் தேங்கி நீர் நிலத்திற்குள் செல்லாமல் அப்படியே ஆவியாகிறது எனவும் உள்நாட்டு வகை மீன்களை தவிர வெளி நாட்டு வகை மீன்கள் வளர்ப்பதால் இந்த பிரச்சினை ஏற்படுவதாக கூறி அவர் மீன் கழிவுகள் அகற்றப்பட்டால் மட்டுமே நிலத்தடி நீர் கீழே இறங்கும் எனவும் குளங்களில் மீன் வளர்ப்பதற்கு தடை செய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்ட வகை மீன்கள் மட்டுமே வளர்க்க அனுமதிக்க முறை படுத்த வேண்டும் என தெரிவித்தார் மேலும் மீன்களுக்கு பல்வேறு வகையான உணவுகள் கூறப்படுவதாலும் அந்த கழிவுகள் மண்ணில் படிந்து நீர் கீழே இறங்காது தடுக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் கவுசிகா நதி மேம்பாட்டு சங்க நிர்வாகி வெற்றிவேல் கூறுகையில் ஒவ்வொரு குளங்களுக்கு வரக்கூடிய ராஜா வாய்க்கால்களை தூர்வார வேண்டும் நீர்வழிப் பாதை யில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் எனவும் பிளாஸ்டிக் கழிவுகளால் குளத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது எனவும் சாக்கடை கழிவு நீர் கலக்காத வண்ணம் திட்டமிட்டால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும் என தெரிவித்தார்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.