ETV Bharat / state

கோவையில் காற்று, ஒலி மாசு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு!

கோவை: மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு செம்மண் எடுப்பதாக புகார் வந்ததையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அப்பகுதியில் காற்று, ஒலி மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

கோவையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு
author img

By

Published : Oct 9, 2019, 11:15 PM IST

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கணேஷ், ராஜேந்திரன் ஆகியோர் இந்த விதி மீறல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தடாகம் செங்கல் சூளைகளில் தொடர்ச்சியாக பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகளவு மண் வெட்டி எடுப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கும் தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து தடாகம் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை, கோவையில் இருந்து வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் காற்றில் மாசுவினைக் கண்டறியும் கருவிகள், ஒலி மாசு கண்டறியும் கருவிகளையும் கொண்டு ஆய்வு நடத்தினர். மொத்தம் ஒன்பது இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு இந்த கருவிகள் வீரபாண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது.

கோவையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு

இந்த இயந்திரங்கள் மூலம் தொடர்ச்சியாக 8 மணி நேரம் காற்று மாசுபடுவது குறித்து கண்காணிக்கப்படுகிறது. கோவை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ரமேஷ், உதவி இயக்குநர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வில் உடனிருந்தனர். இந்த பகுதியில் தொடர்ந்து சில தினங்கள் ஆய்வு நடத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு!

Intro:கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல் சூளை களுக்காக அதிக அளவு எடுப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் காற்று மற்றும் ஒலி மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

Body:கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது இதனையடுத்து இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர் மேலும் அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கணேஷ் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் இந்த விதி மீறல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர் இந்நிலையில் தடாகம் செங்கல் சூளைகளில் தொடர்ச்சியாக பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகளவு மண் வெட்டி எடுப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தொடர்பு புகார் செல்லவே மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று தடாகம் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர் சென்னை மற்றும் கோவையில் இருந்து வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காற்றினை கண்டறியும் கருவிகள் ஒலி மாசு கண்டறியும் கருவிகளையும் கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர் மொத்தம் ஒன்பது இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு இந்த கருவிகள் வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது இந்த இயந்திரங்கள் மூலம் தொடர்ச்சியாக 8 மணி நேரம் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து கண்காணிக்கப்படுகிறது கோவை மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் உதவி இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் வீரபாண்டி பகுதியில் காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இந்த ஆய்வு பணியானது இந்த பகுதியில் தொடர்ந்து சில தினங்கள் நடத்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.