ETV Bharat / state

போக்சோ வழக்குகளில் விரைந்து நீதி வழங்க வேண்டும் - மாதர் சங்கம் வலியுறுத்தல்

காவல் நிலையங்களில் பதிவாகும் போக்சோ வழக்குகளை உரிய காலத்திற்குள் விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில குழு வலியுறுத்தியுள்ளது.

pollachi women's Association demand to rush out all the pocso cases  pollachi women's Association demand  pocso cases  sexual harassment  coimbatore news  coimbatore latest news  கோயம்புத்தூர் செய்திகள்  போக்சோ வழக்குகளில் விரைந்து நீதி வழங்க வேண்டும்  பொள்ளாச்சியில் போக்சோ வழக்குகளில் விரைந்து நீதி வழங்க வேண்டும்  பாலியல் வழக்கு  போக்சோ சட்டம்  மாதர் சங்கம்
மாதர் சங்கம்
author img

By

Published : Jul 25, 2021, 4:11 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் அதிகளவில் நடக்கின்றன. குறிப்பாக ஊரடங்கு காலத்தில் இவை அதிகரித்துள்ளதால், இது குறித்து நேற்று (ஜூலை 24) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின், கோயம்புத்தூர் மாவட்ட குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சமீபத்தில் பாலியல் வன்புணர்விற்கு ஆளான மைனர் பெண்ணை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதையடுத்து பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணியை சந்தித்து பொள்ளாச்சி காவல் நிலையங்களில் பதிவாகும் போக்சோ வழக்குகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், குழந்தைகள் மற்றும் பெண்களிடையே உரிய நம்பிக்கையை காவல் துறை அளிக்க வேண்டும் என்றும் மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் டி.சுதா தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகி சாந்தா, சட்ட உதவி தலைவர் பங்கஜவள்ளி, சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா தலைவர் ரேவதி, செயலாளர் டி.விஜயா, தாலுகா கமிட்டி உறுப்பினர் சித்ரா, ஜெயப்பிரியா, மாரியம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

போக்சோ வழக்குகள்

இதையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினரும், மாதர் சங்கத்தின் கோவை சட்ட உதவி மாவட்ட செயலாளருமான டி.சுதா பேசுகையில், “பாலியல் குற்றங்கள் தமிழ்நாடு முழுவதும் சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குகள் நடப்பாண்டில் மட்டுமே 19ஐ நெருங்கிவிட்டது.

இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பது வருத்தமளிக்கிறது. எனவே காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள, பதிவாகின்ற போக்சோ வழக்குகளை விரைந்து மூன்று மாதங்களுக்குள்ளாக விசாரணையை முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். இதனை தமிழ்நாடு அரசும், நீதித்துறையும் துரிதமாக செயல்படுத்த வேண்டும்.

பொள்ளாச்சி பகுதிகளில் பாலியல் குற்றங்கள் நடந்த பின்னர் காவல் துறையினர் விழிப்புணர்வு பரப்புரைசெய்கின்றனர். இதனை முன்னதாகவே செய்திருத்தல் வேண்டும். இனியும் தொடர்ந்து போக்சோ குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகளை நடத்த வேண்டும். குறிப்பாக பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் மட்டுமே விழிப்புடன் இருந்தால் போதாது. அது பொது சமூகத்தின் கடமை ஆகும்.

பாலியல் கல்வி

பாலியல் கல்வி குறித்து தமிழ்நாடு பாடநூல்களில் அடிப்படை தரவுகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி முதல் மனிதர்கள்வரை அடிப்படை பாலியல் சார்ந்து உறுப்புகள், இனப்பெருக்க காலங்கள் என அனைத்தும் அறிவியலாகவே நூலில் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதனை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பித்தலின்போது உரிய முறையில் சொல்லித் தர தயங்குகின்றனர். மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் தனது மாணவர்களிடம் குடும்ப சூழலையும், பின்னணிகளையும், தெரிந்து, புரிந்து நடத்த வேண்டும். குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான பிரச்னைகளை தைரியமாக ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் சொல்வதற்கான தகவமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் பாலியல் வன்புணர்வுகளுக்கு ஆளான பெண் குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வழிவகை செய்ய வேண்டும். பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகளை தேசிய குழந்தைகள் நல ஆணையம் கண்காணித்து, உரிய முறையில் சட்டரீதியாக தீர்வு காணவேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம்- குடிபோதை காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.