ETV Bharat / state

பொள்ளாச்சி போலீசாரின் செயலை பாருங்கள் - பொதுமக்களின் பாராட்டு! - சாலைகளை பாதுகாக்கும் காவல்துறையினர்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் சேதமடைந்த சாலையில் விபத்தை ஏற்படுத்தும்  கம்பிகளை வெட்டியெடுத்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Breaking News
author img

By

Published : Nov 10, 2019, 4:31 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து கேரளாவுக்கும், கேரள பகுதியிலிருந்து தமிழ்நாட்டிற்கும் வந்து செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இவ்வழியாக இரவு பகல் பாறாமல் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதியாகக் காணப்படுகிறது. இந்தச் சாலைப்பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரயில்வே கீழ்மட்ட பாலம் கட்டப்பட்டது.

பாலத்தின் கீழ் சாலை தரமாக அமைக்கப்படாததால் சாலையின் கான்கிரீட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிந்தபடி உள்ளன. இதனால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் அபாயம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று (நவ.09) அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொள்ளாச்சி கிழக்குக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துச்சாமி, காவலர்கள் மார்கண்டன், தினேஷ் ஆகியோர் இணைந்து சாலையில் இருந்த கம்பிகளை வெட்டியெடுத்தனர்.

கம்பிகளை அகற்றும் காவல்துறையினர்
கம்பிகளை அகற்றும் காவல் துறையினர்

இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் எந்த சிரமமும் இல்லாமல் சென்றனர். காவலர்கள் சாலையை சீரமைக்கும் பணியைப் பார்த்த பொதுமக்கள் அவர்களின் செயலை வியந்து பாராட்டினர்.

சாலையை சரி செய்யும் காவல் துறை

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டியது நெடுஞ்சாலைத் துறையின் பொறுப்பு. சாலையில் நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டியது தனது துறையின் பணி இல்லை என தட்டி கழிக்காமல், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் விபத்து ஏற்படுத்தும் விதமாக நீட்டிக் கொண்டிருந்த கம்பிகளை அகற்றிய காவல் துறையினரின் பொறுப்புணர்வு பாராட்டத்தக்கது" என்றனர்.

Intro:சாலையில் ஆபத்தை ஏற்படும் கம்பிகளை அகற்றிய போலீஸாரின் பொறுப்புணர்வுக்கு பொதுமக்கள் பாராட்டுBody:பொள்ளாச்சியில்சேதமடைந்த சாலையில் விபத்தை ஏற்படுத்தும் கம்பிகளை வெட்டி எடுத்த போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
 பொள்ளாச்சி மீன்கரை சாலை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கும், கேரள பகுதியிலிருந்து தமிழகத்துக்கு வந்து  செல்லும் பிரதான சாலையாக  உள்ளது. இந்த வழியாக இரவு பகலாக வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த சாலையில் சீனிவாசபுரத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் ரயில்வே கீழ்மட்ட பாலம் கட்டப்பட்டது.  பாலத்தின் கீழ் சாலை தரமாக அமைக்கப்படாததால் சாலையின்  கான்கிரீட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிந்தபடி உள்ளன. இதன் காரணமாக, அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் அபாயம் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.  
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய எஸ்ஐ முத்துச்சாமி, காவலர்கள் மார்கண்டன், தினேஷ் ஆகியோர் வாகனங்கள் தடையின்றி  பாதுகாப்பாக செல்லும் விதமாக சாலையில் இருந்த கம்பிகளை வெட்டி எடுத்தனர்.  இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் எந்த சிரமமும் இல்லாமல் சென்று வருகின்றனர். காவலர் சாலையை சீரமைத்த காட்சியை பார்த்த  பொதுமக்கள் அவர்களின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து சென்றனர்.Conclusion:இது குறித்து பொதுமக்கள் கூறும்போது,‘‘ சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டியது நெடுஞ்சாலை துறையின் பொறுப்பு. சாலையில் நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டியது தனது துறையின் பணி இல்லை என தட்டி கழிக்காமல்
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் விபத்து ஏற்படுத்தும் விதமாக நீட்டிக் கொண்டிருந்த கம்பிகளை அகற்றிய  போலீஸாரின் பொறுப்புணர்வு பாராட்டதக்கது,’’ என்றனர்.
இருசக்கர வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாகும் கம்பிகளை அகற்றும் போலீஸார். 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.