ETV Bharat / state

தப்பியோடிய குற்றவாளியை விரட்டிப் பிடித்த காவல்துறையினர்!

கோவை: நீதிபதியிடம் ஆஜர் செய்ய காத்திருந்தபோது, தப்பியோடிய குற்றஞ்சாட்டப்பட்ட நபரை காவல்துறையினர் விரட்டி பிடித்துள்ளனர்.

தப்பியோடிய குற்றவாளியை விரட்டிப் பிடித்த காவல்துறையினர்

author img

By

Published : Jan 23, 2020, 6:53 AM IST

பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டியில் நியாய விலைக் கடையில் பணிபுரிந்துவருபவர் பாலகிருஷ்ணன். அங்கு இவர் புதன்கிழமை(ஜனவரி 22) பணியிலிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜெகநாதனின் மகன் கிருஷ்ணகுமார் நியாயவிலைக் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது பணியிலிருந்த பாலகிருஷ்ணனிடம், நான் கூறிய நபர்களுக்கு ஏன் பொங்கல் பொருள்கள் தரவில்லை என்று கூறி தகராறு செய்து, பாலகிருஷ்ணனை தகாத வார்த்தையால் திட்டிக் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலகிருஷ்ணன் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தார். அதன் அடிப்படையில் கிருஷ்ணகுமாரை காவல்துறையினர் கைது செய்து ஜெ.எம். 2 நீதிபதி ஆஜர்படுத்த அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

தப்பியோடிய குற்றவாளியை விரட்டிப் பிடித்த காவல்துறையினர்

நீதிபதி வீட்டின் முன்பு காவலர்களுடன் நின்றிருந்த கிருஷ்ணகுமார் திடீரென தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் கிருஷ்ணகுமாரை துரத்திச் சென்றுள்ளனர். பின் அவரை, எஸ்வி நாயுடு வீதியில் காவல்துறையினர் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.

இதையும் படிங்க: 'யானையும் பாகனும் ஒரே இலையில்' - வைரல் வீடியோ!

Intro:arrestBody:arrestConclusion:தப்பியோடிய கைதியை விரட்டிப் பிடித்த போலீசார்                  பொள்ளாச்சி , ஜன.22       பொள்ளாச்சி டி .கோட்டாம்பட்டியில் நியாய விலை கடையில் பணிபுரிந்து வருபவர் பாலகிருஷ்ணன் .இவர் புதன்கிழமை பணியில் இருந்தபோது டி. கோட்டாம்பட்டி நேரு நகரைச் சேர்ந்த தி.மு.க முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜெகநாதன் மகன் கிருஷ்ணகுமார்  நியாயவிலைக் கடைக்கு சென்றுள்ளார் .அங்கு பணியில் இருந்த பாலகிருஷ்ணனிடம் நான் கூறிய நபர்களுக்கு ஏன் பொங்கல் பொருட்கள் தரவில்லை என்று  கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பாலகிருஷ்ணனை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. பாலகிருஷ்ணன் மகாலிங்கபுரம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்து ஜெ.எம். 2 மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்துவதற்காக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர் . மாஜிஸ்திரேட் வீட்டின் முன்பு போலீசாருடன் நின்றிருந்த கிருஷ்ணகுமார் திடீரென தப்பியோடியுள்ளார் .அதிர்ச்சி அடைந்த போலீசார் கிருஷ்ணகுமாரை துரத்தி சென்றுள்ளனர் .எஸ்வி நாயுடு வீதியில் வைத்து கிருஷ்ணகுமாரை சுற்றிவளைத்த போலீசார் கைது செய்தனர் .இதனால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.