ETV Bharat / state

பொள்ளாச்சியில் வரிப்புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சிசிடிவி கேமரா!

கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள சேத்துமடை வனப்பகுதியில் வரிப்புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்கவுள்ளதாக வனத்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

pollachi people demand forest officers
author img

By

Published : Sep 1, 2019, 8:21 PM IST

பொள்ளாச்சி வனச்சரக வனப்பகுதிகளுக்குட்பட்ட சேத்துமடை சோதனை சாவடி, போத்தமடை பீட்டில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் மழைக்கால ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், வனத்துறை வாகனம் முன்பு வரிப்புலி ஒன்று நடந்து சென்றதைக் கண்டனர். இதையடுத்து காலை போத்தமடை சென்ற வனத்துறையினர் வரிப்புலிகளின் கால் தடங்களை வைத்து, இப்பகுதியில் வரிப்புலியின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.

pollachi people demand forest officers to set the camera for monitering tiger activities
வரிப்புலியின் கால் தடங்கள்

வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், "ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரிப்புலிகளின் எண்ணிக்கை 38க்கும் மேல் இருப்பது பதிவாகியுள்ளது. சேத்துமடை சோதனைச் சாவடி, போத்தமடை பீட்டில் வன விலங்குகள் தண்ணீர் அருந்த வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிக்கு வருகிறது. இதையடுத்து வனப்பகுதியில் வாகனரோந்து பணியின் போது வரிப்புலிகளின் நடமாட்டமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் விரைவில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு, வரிப்புலிகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதுமட்டுமின்றி, சுழற்சி முறையில் வனத்துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்" என தெரிவித்தார்.

Intro:tiggerBody:tiggerConclusion: பொள்ளாச்சி அடுத்துள்ள சேத்து மடை வனப்பகுதியில் வரி புலியின் நடமாட்டம், கேமரா அமைக்க வனத்துறை தகவல் .பொள்ளாச்சி -31பொள்ளாச்சி வனச்சரக வனப்பகுதிகளில் மழைக்கால ரோந்து பணியை சேத்துமடை சோதனை சாவடி போத்தமடை பீட்டில் நேற்று இரவு வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில்மேற்கொண்டனர் இதில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுப்பட்டனர், வனத்துறை வாகனம் முன்புவரி புலி ஒன்று நடந்து சென்றதை கண்டனர் ,இதையடுத்து இன்று காலை போத்தமடை சென்ற வனத்துறையினர் வரிபுலி சென்ற வழித்தடத்தில் கால் தடம் இருப்பது கண்டறியப்பட்டது இப்பகுதியில் வரி புலி இருப்பது உறுதி செய்தனர், வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரி புலியின் எண்ணிக்கை 38 க்கும் மேல் இருப்பதுபதிவாகி உள்ளது.சேத்துமடை சோதனை சாவடி போத்தமடை பீட்டில் வன விலங்குகள் தண்ணீர் அருந்த வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிக்கு வருகிறது. இதையடுத்து வனப்பகுதியில் வாகனரோந்து பணியின் போது வரி புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அப்பகுதியில் விரைவில் கேமரா அமைக்கப்படும் ,வரிபுலியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க சுழற்ச்சி முறையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் ஈடுப்படுவார்கள் என தெரிவித்தார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.