கோவை மாவட்டம் வால்பாறையில் ஒரு வார காலமாக கனமழை பெய்துவருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரம் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், வெள்ள நிவாரண முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வால்பாறையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார். இதனையடுத்து நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.