கோவையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் கரும்புக்கடை பகுதி சேரன் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதனை பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”தொண்டாமுத்தூர் தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த சுற்றுச்சுவர் ஆறு மாதங்களே ஆன நிலையில் மழையில் பழுதடைந்து விழுந்துள்ளது.
இவ்வாறு தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள இந்தச் சுவரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், ஸ்மார்ட் சிட்டி அலுவலர்கள், ஒப்பந்ததாரர் அனைவரும் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் தலைமையில் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை இந்தப் பணிகள் தொடரக்கூடாது என்று மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்க உள்ளேன் ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணியாருக்கு தீ வைத்த நபர் - காவல் துறையினர் விசாரணை