பொள்ளாச்சி போத்தனூர் அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்து, கடந்த 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த வழித்தடத்தில் காலை, மாலை நேரங்களில் இயக்கப்படும் ரயில்களை அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இந்த ரயில் பொள்ளாச்சி - கோவை இடையில் கிணத்துக்கடவு மற்றும் போத்தனூர் மட்டுமே நிறுத்தப்பட்டது. தற்காலிகமாக இயக்கப்பட்டுவந்த இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பொள்ளாச்சி ரயில் பயணிகள் சங்கம் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துவந்தது.
அதே போன்று கோவை - பழநி வரை செல்லும் பயணிகள் ரயிலையும் நிரந்தரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் ரயில்வேத் துறை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தற்காலிக நீட்டிப்பு மட்டுமே செய்தது.
இந்நிலையில் நேற்று ரயில்வே பொது மேலாளர் பிறபித்த உத்தரவில், கோவை - பழனி பயணிகள் ரயிலுக்கு 566609 என்ற எண்ணும் பொள்ளாச்சி பயணிகள் ரயிலுக்கு 56184 என்ற எண்ணும் வழங்கப்பட்டன. இரு ரயில்களும் நாளை முதல் இந்த ரயில்கள் அந்தந்த வழித்தடங்களில் நிரந்தரமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி சம்பவத்தில் துணைசாபநாயகர் மகன் மீது நடவடிக்கை இல்லை - ஸ்டாலின்