பொள்ளாச்சி நகராட்சியில் செயல்பட்டுவரும் நான்கு அரசுப் பள்ளிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டிகளை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று வழங்கினார்.
இரண்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், இரண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் சேர்த்து 940 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை அவர் வழங்கினார். பின்னர் மாணவர்கள் முன்பு உரையாற்றிய அவர், ”தமிழ்நாடு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பள்ளி மாணவ, மாணவிகளின் நலன்கருதி பல நல்ல திட்டங்களைத் தந்துள்ளார்.
இதில் இலவச மடிக்கணினி, மிதிவண்டி, இலவச பஸ் பாஸ் என 14 வகையான சலுகைகள் அடங்கும். தற்பொழுது உள்ள முதலமைச்சர் தலைமையிலான அரசும், கல்விக்கென 35 ஆயிரம் கோடியை வருடத்திற்கு ஒதுக்குகிறது” என்றார்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காமல் தனியார் பேருந்து மீது மோதி விபத்து