இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜா தலைமைத் தாங்கினார். இதில் பொள்ளாச்சி அரிமா சங்கத்தின் சார்பில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குளுக்கோஸ் ஸ்டேண்ட், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 30 குளூக்கோஸ் ஸ்டேண்டுகள் கொடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தன்னார்வலர் மகாலிங்கம் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குளூக்கோஸ் ஸ்டேண்டுகளை வழங்கினார்.
மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வாணி மகால் கண்ணன் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டெதஸ்கோப்புகளையும் நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் வெள்ளை நடராஜ், கவிஞர் முருகானந்தம், இளமாறன், சுப்பிரமணியன் ஆகியோர் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குளுக்கோஸ் ஸ்டேண்டுகளையும் பொள்ளாச்சி இன்ஜினியர் அசோசியேஷன் சார்பில் தாய்ப்பால் சேமிப்பு வங்கிக்கான 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அலுமினிய கட்டமைப்பு உதவியையும் தலைமை மருத்துவர் ராஜாவிடம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள், பொள்ளாச்சி அரிமா சங்க நிர்வாகிகள் அப்பாஸ், ரமேஷ்குமார், ராஜசேகர், அரிமா ம. சண்முகம், என்ஜினியர்ஸ் அசோசியேஷனைச் சேர்ந்த வெங்கடேஷ், நிர்வாகிகள், தன்னார்வலர்கள், மருத்துவமனை செவிலியர், ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ராஜிவ் காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ்!