கோயம்புத்தூர்: தமிழகத்தில் 500 மதுபான கடைகள் கடந்த ஜன் 22ம் தேதி முதல் மூடப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. முன்னாள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டப்பேரவையில் தமிழகத்தில் இயங்கி வரும் 5,329 மதுபான கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தார்.
அதன் தொடர்சியாக, ஜூன் 22 தேதி முதல் 500 கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. எந்த 500 கடைகள் மூடப்பட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் பட்டியல் வெளியிட்டது,உத்தரவின் பேரில் கடைகள் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி அடைக்கப்பட்டன. இதை அடுத்து கோவை மாவட்டம் முழுவதும் 20 மதுபான கடைகள் மூடப்பட்டன.
இதில் பொள்ளாச்சி அருகே உள்ள துறையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை எண் 2286, நான்கு வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூடப்படும் கடைகள் எண்ணிக்கையில் துறையூர் கடையும் உள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நான்கு வருடங்களாக இயங்காமல் இருந்த டாஸ்மாக் கடை மீண்டும் மூடப்படும் என தெரிந்த நிலையில் இது பல கேள்விகளை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: "செந்தில் பாலாஜி இல்ல.. அவரு 10 ரூபாய் பாலாஜி" - பிரேமலதா விஜயகாந்த் சாடல்!
இதன் அடிப்படையில் பொள்ளாச்சி ஜல்லிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் பேசுகையில், “சென்ற ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு கொடி ஏந்தி மதுவிலக்கு அளிக்க போராட்டம் நடத்தினர்.அதன் தொடர்ச்சியாக திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவதாக அறிவித்தனர்.
இந்தாண்டு தமிழகத்தில் இயங்கி வரும் 5,329 மதுபான கடைகளில் 500 கடைகளை மூடப்போவதாக அறிவித்தனர்.அதுவும் அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட மதுபான கடைகளையே மீண்டும் மூடப்போவதாக கணக்கு காட்டுகின்றனர்.பொள்ளாச்சி துறையூரில் நான்கு வருடங்களுக்கு முன் நிரந்தரமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடை இப்பொழுது அறிவித்துள்ள 500 கடைகளில் ஒன்று என அறிவிப்பாணை மூலம் தெரிகிறது” என கூறினார்
தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களின் நலன் கருதி பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்றார்.மேலும், தமிழக அரசு இப்பிரச்சனைகளை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: Vande Bharat: போபாலில் இருந்து 5 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவை இன்று தொடக்கம்