கடந்த 9ஆம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதி புங்கன் ஓடை, போத்தமடை தோட்டத்து உரிமையாளர்கள் இரண்டு புலிகள் இறந்து கிடப்பது குறித்து தகவல் அளித்ததின்பேரில் வனத் துறையினர் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டு உயர் அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து வனத் துறையினர் வனப்பகுதியையொட்டி உள்ள நபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் ராசு, கருப்புசாமி ஆகிய இருவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். இந்தப் பணியில் அலட்சியப்போக்கில் இருந்ததாக வனவர் பிரபாகரன், வனக்காப்பாளர் சபரிநாதன், வனக்காவலர் அஜித்தரன் மூவரும் பணியிடை நீக்கம்செய்யப்பட்டனர்.
புலிகள் இறந்த இடங்களைக் கள இயக்குநர் டெபாஸ்டிஸ் ஜனா, தலைமை வனப் பாதுகாவலர்கள் யுவராஜ், துரைராஜ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை செய்தனர். இதில் இணை இயக்குநர் சேவியர், வன அலுவலர் செல்வம், வனச்சரகர்கள் காசிலிங்கம், மணிகண்டன், உள்பட அலுவலர்கள் உடன் இருந்தனர், மேலும் புலியை விஷம் வைத்து கொன்ற வழக்கில் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க...புலிகளை விஷம் வைத்துக் கொன்ற இருவர் கைது